கல்வி வானொலி
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு பயன்பட்டு வரும்
இந்த இணையவழி கல்வி வானொலி [வலையொலி] - Online KalviRadio எனும் எளிமையான , வலிமையான தொழில்நுட்பத்தை கல்வி துறைக்கு அர்ப்பணிக்க காத்திருக்கிறோம்.
கேட்டுக்கொண்டே கற்கலாம்..
கேட்டுக்கொண்டே எழுதலாம்..
மாணவர்களும் பங்குபெறலாம்,
சுயகற்றல் மேற்கொள்ளலாம்.
ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில்
கற்பித்தல் செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது.
கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை , வியாபார நோக்கம் இல்லை.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக
அரசு பள்ளி ஆசிரியர்களின்
தன்னார்வக் கூட்டு முயற்சி இது....
இதில் கடந்த இராண்டு காலமாக
நானும் எனது மாணவர்களும் தொடர்ந்து பங்களிப்பு வழங்கி வருகின்றோம் .
Online KalviRadio-வின் சிறப்பம்சங்கள்:-
1-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Online கல்வி Radio (கல்வி வலையொலி)
Playlist இருப்பதால் , மீண்டும் மீண்டும் தேவையானவற்றை கேட்கலாம்.
மெல்ல மலரும் மாணவர்கள் பாடப் பகுதிகளை பல முறைக்கேட்டு கருத்தில் வலுப்பெறலாம்.
சாதாரண Browserஉள்ள Mobileகளே போதுமானது.
மாணவர்கள் எளிதாக , குழப்பமின்றி இயக்கலாம்.
கல்வி வானொலி மூலம் ணவர்களுக்கு பாடங்கள் பாடல் பாடல்கள் கதைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி வானொலியை கேட்க கீழே தொடவும்.

Comments
Post a Comment