Posts
அறிவியல் கண்காட்சி
- Get link
- X
- Other Apps
அறிவியல் கண்காட்சி நம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் #onlinekalviradio வின் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது ... வட்டார கல்வி அலுவலர்கள் நம் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்த்தும் அவர்களின் விளக்கத்தை கேட்டும் வியந்தனர் .. மேலும் நம் பள்ளிக்கு #onlinekalviradio மற்றும் கலாம் யுவி அறக்கட்டளை வழங்கிய பாராட்டு மடலையும் & மாணவர்களுக்கு #onlinekalviradio வழங்கிய பாராட்டு சான்றிதழையும் வழங்கினர் .. வீடியோ பார்க்க இதை தொடவும்
குழந்தைகள் தினம்
- Get link
- X
- Other Apps
குழந்தைகள் தினம் கடந்த 25-2-22 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கோலேந்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆன்லைன் கல்வி ரேடியோ குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது . இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார்கள் . நம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு சேக் அலாவுதீன் அவர்களும் , நம் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி விஜி அவர்களும் , ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்லம்மாள் கருப்பையா அவர்களும் முன்னிலை வகித்து பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வாழ்த்துரையும் வழங்கி சிறப்பித்தார்கள் . மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம் அவர்கள் நம் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை கண்டு மிகவும் பாராட்டினார்கள் வாழ்த்தினார்கள் .. சிறப்பாக செயல்பட்ட நம் பள்ளிக்கு வாழ்த்து மடலையும் ஆசிரியர்களுக்...
கல்வி வானொலி
- Get link
- X
- Other Apps
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு பயன்பட்டு வரும் இந்த இணையவழி கல்வி வானொலி [வலையொலி] - Online KalviRadio எனும் எளிமையான , வலிமையான தொழில்நுட்பத்தை கல்வி துறைக்கு அர்ப்பணிக்க காத்திருக்கிறோம். கேட்டுக்கொண்டே கற்கலாம்.. கேட்டுக்கொண்டே எழுதலாம்.. மாணவர்களும் பங்குபெறலாம், சுயகற்றல் மேற்கொள்ளலாம். ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் கற்பித்தல் செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது. கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை , வியாபார நோக்கம் இல்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி இது.. .. இதில் கடந்த இராண்டு காலமாக நானும் எனது மாணவர்களும் தொடர்ந்து பங்களிப்பு வழங்கி வருகின்றோம் . Online KalviRadio- வின் சிறப்பம்சங்கள் :- 1 - 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Online கல்வி Radio ( கல்வி வலையொலி ) Playlist இருப்பதால் , மீண்டும் மீண்டும் தேவையானவற்றை கேட்கலாம் . மெல்ல மலரும் மாணவர்கள் பாடப் பகுதிகளை பல முறைக்கேட்டு கருத்தில் வலுப்பெறலாம் . சாதாரண Browser உள்ள M...